நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமண விழா... ஆட்டம் போட்ட ஷில்பா ஷெட்டியின் வீடியோ வைரல்!

ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி
ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி

நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணக் கொண்டாட்டத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி
ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி

பிரபலங்களின் திருமண செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஒன்று. அந்த வகையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி பக்னானி திருமணம் குறித்தான செய்திகளை இணையவாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். அந்த வகையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்- ஜாக்கி பக்னானி திருமணம் கோவாவில் இன்று நடைபெற்றது. கோவாவில் இயற்கை சூழலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திரையுலகில் முக்கிய பிரபலங்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் நடந்த சூழல் மட்டுமல்லாது, சர்க்கரை, குளுட்டோன் இல்லாத உணவு வகைகள், திருமணத்தில் கலந்து கொள்ளும் உறவினர்களுக்கு சூழலுக்கு மாசு இல்லாத பரிசுகள், ஆன்லைன் அழைப்பிதழ் என இவர்களது திருமண ஏற்பாடுகளுமே சூழலுக்கு தீங்கில்லாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.

அந்த வகையில், திருமணக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சங்கீத் நேற்று நடந்துள்ளது. ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாட்டமாகக் கழிந்த இந்த நிகழ்வில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் நடனம் ஆடி அசத்தியுள்ளார். பஞ்சாபி பாடல்களுக்கு உற்சாகமாக நடனம் ஆடியுள்ள இந்த ஜோடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


பணிகள் நிறைவு... கருணாநிதி நினைவிடத்தை 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்!

ரூ.3000 கோடி ’மியாவ் மியாவ்’ போதைப்பொருள் மீட்பு... டெல்லி - புனே போதை வலைப்பின்னலில் கிறுகிறுத்த போலீஸார்

யூடியூபில் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்... தாயும், சேயும் பலியான சோகம்!

ரம்ஜான் உணவுத் திருவிழாவை தடை செய்யுங்க... பெங்களூரு தமிழர்கள் திடீர் போர்க்கொடி!

தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாரிசு வந்தாச்சு... தீயாய் பரவும் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in