ஷூட்டிங் ஸ்பாட்ல திடீரென மயங்கி விழுந்த நடிகை சமந்தா!

சமந்தா
சமந்தா

'சிட்டாடல்’ படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, தான் திடீரென மயங்கி விழுந்த தகவலை தனது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா
சமந்தா

நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் பல வருடங்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்காக சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த நேரத்தில், தனது உடல்நலன் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

இந்த வாரத்தில் வெளியாகியுள்ள அந்தத் தொடரில் பேசிய நடிகை சமந்தா, “ ‘குஷி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து ’சிட்டாடல்’ தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. இதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் எனக்கு உடல் ரீதியாக சிரமமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டு, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். இதன் பின்னர் படக்குழுவினர் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தாலும் ஒருவழியாக ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சையில் இருந்தபோதே சமந்தா இந்தத் தொடரில் நடித்தார். தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் எந்தவிதமான டூப்பும் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ள சமந்தா, இனி வலுவான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் எனவும் தனது ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in