ராணி போல பார்த்துக் கொள்ளும் கணவர் வேண்டும்: நடிகை ராஷ்மிகா மந்தனா!

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தன்னை ராணி போல பார்த்துக் கொள்ளும் கணவர் வேண்டும் என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். இவரின் இந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா

’நேஷனல் கிரஷ்’ எனக் கொண்டாடப்படுவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தெலுங்கு, தமிழ், பாலிவுட் என மாறி மாறி நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ் என பைலிங்குவலாக உருவாகி வரும் ‘டி 51’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

இவர் விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ’கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்கள் ஹிட் அடித்தன. இந்த ஜோடியும் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதால் இவர்களது ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியும் திரையில் இயல்பாகவே உள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா

மேலும், விஜய் தேவரகொண்டாவின் ‘ரெளடி’ துணி நிறுவனத்தின் உடைகளை பொதுவெளியில் அணிவது, ஒரே மாதிரியான பின்னணியில் இருவரும் தனித்தனியாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்வது என இருப்பார்கள். இதனால், இந்த ஜோடி அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவதுண்டு. இருவருமே இதுகுறித்து மறுத்து விளக்கம் கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை.

அப்படித்தான் இப்போது ராஷ்மிகாவின் கணவர் குறித்தான எதிர்பார்ப்பில் ராணி மாதிரி அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் சொல்லி இருக்கிறார்கள். இதைப் பார்த்த ராஷ்மிகா ‘உண்மை’ எனக் கூறியதோடு, கணவரின் இன்னொரு குணமாக தான் எதிர்பார்க்கும் ‘விடி’க்கும் டிக் அடித்திருக்கிறார்.

அதாவது, ‘விடி’ என்றால் இங்கு ‘Very Daring' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், இதனை ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா என்றே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகாவை இணைத்து இந்த செய்தியை வைரல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in