500 சவரன் நகை... நட்சத்திர ஓட்டல்... மகளுக்கு சீர்வரிசை கொடுத்து அசத்திய நடிகை ராதா!

500 சவரன் நகை... நட்சத்திர ஓட்டல்... மகளுக்கு சீர்வரிசை கொடுத்து அசத்திய நடிகை ராதா!

சமீபத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிற்குத் திருமணம் நடந்து முடிந்தது. மகளின் திருமணத்திற்கு 500 சவரன் நகை, நட்சத்திர ஓட்டல் என சீர்வரிசை கொடுத்து அசத்தியிருக்கிறார் ராதா.

கார்த்திகா நாயர்
கார்த்திகா நாயர்

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர், ஜீவா ஜோடியாக ‘கோ’ படத்தில் அறிமுகமானார். ஆசைக்கு ஒரு படம் நடித்து முடித்துவிட்டு தனது தந்தை ராஜசேகரனின் ஓட்டல் பிசினஸை கவனித்துக் கொள்ள சென்று விட்டார் கார்த்திகா. இவரது திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்தது. கடந்த 19ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த திருமணத்தின் அலங்காரங்களும், திருமண வைபோகத்தின் ஒவ்வொரு நாளும் கார்த்திகா அணிந்த உடைகளும் நகைகளும் அசத்தலாக அமைந்தது.

கார்த்திகா நாயர்
கார்த்திகா நாயர்

நெருங்கிய உறவினர்கள், ராதாவின் திரையுலக நண்பர்கள் என கலந்து கொண்ட இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. கார்த்திகா ரோஹன் என்ற தொழிலதிபரைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண சீர்வரிசையாக மகளுக்கு 500 சவரன் நகையும், நட்சத்திர ஓட்டல் ஒன்றையும் கொடுத்துள்ளார் ராதா.

கார்த்திகாவின் தந்தையும் தொழிலதிபருமான ராஜசேகரனுக்கு மும்பை, கேரளா, தமிழ்நாட்டில் பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று BLACK FRIDAY... களை கட்டும் ஆன்லைன் விற்பனை... கம்மி விலையில் கைநிறைய அள்ளலாம்!

சென்னையில் பரபரப்பு... 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் நோய்த்தொற்று!

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரூ.1 கோடி ஹவாலா பணத்துடன் ஆட்டோவில் வந்த கும்பல்! போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்த ஓட்டுநர்!

அவலம்... இறந்தவரின் உடலை 9 கிமீ தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்ற மக்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in