நடிகை மீதா ரகுநாத்
நடிகை மீதா ரகுநாத்

நானெல்லாம் காதலிப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை... ’குட்நைட்’ நாயகி எமோஷனல்!

“நானெல்லாம் காதலிப்பேன் என்று நினைக்கவே இல்லை. அதேபோன்று, எனது திருமணம் படுகா முறையில் நடக்கும் என்பதையும் எதிர்பார்க்கவில்லை” எனச் சொல்லி இருக்கிறார் நடிகை மீதா ரகுநாத். சமீபத்தில் நடந்து முடிந்த தனது திருமணம் மற்றும் அதன் சந்தோஷமான தருணங்களை பகிர்ந்துள்ளார் மீதா.

'முதல் நீ முடிவும் நீ’, ‘குட்நைட்’ போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை மீதா ரகுநாத். இவருக்குக் கடந்த வாரம் திருமணம் நடந்து முடிந்தது. படுகா முறைப்படி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவரது திருமணம் நடந்தது. இவரது திருமணத்திற்கு ரசிகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளைச் சொல்லி வந்தனர். இந்த சூழ்நிலையில் தனது திருமணம் குறித்தான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மீதா.

இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில், ‘நான் படுகர் இனத்தில் பிறந்திருந்தாலும் நகரத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டவள். அதனால் எங்களின் பாரம்பரியமான படுகா முறையில் எனது திருமணம் நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இதை விட முக்கியமான ஒன்று, நானெல்லாம் காதலில் விழுவேன் என்றும் எதிர்க்கவே இல்லை. ஆனால், அதை செய்திருக்கிறேன். ஒவ்வொரு படுகா திருமணத்திலும் மதில் போன்ற அமைப்பு புனிதமாக கருதப்படுகிறது. நாங்கள் கிராமத்தில் திருமணம் செய்யவில்லை என்றாலும் அந்த மதில் போன்ற அமைப்பு எங்கள் திருமணத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைத்து அதைக் கொண்டு வந்தோம்.

இந்த ஐடியாவை எனது அம்மாதான் கொடுத்தார். என் சகோதரி அதை சரியாக செய்து முடித்தார். உங்களுக்கான அன்பை கண்டறிவது தெய்வீகமான தருணம். அந்த அன்பு உங்கள் முன்னால் வரும்போது அதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு வேண்டும். எனக்கு அதைக் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. கூடுதலாக எங்கள் திருமணம் படுகா முறையில் நடந்தது இன்னும் ஸ்பெஷல்’ எனக் கூறியுள்ளார் மீதா.

இதையும் வாசிக்கலாமே...

இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!

லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!

யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!

'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in