நீங்கள் இல்லாமல் நான் இல்லை... கேலி செய்தவர்களுக்கும் நன்றி சொல்லி நெகிழ்ந்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்

``நீங்கள் இல்லாமல் நான் இல்லை. இந்தப் பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி'' என நெகிழ்ச்சியான ஒரு வீடியோவைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷூக்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதன் பிறகு தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலமாக தமிழுக்கும் வந்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு, ‘தொடரி’, ‘பைரவா’, ‘சர்கார்’ எனப் பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு ‘மகாநடி’ திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அந்தப் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரியின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் அவரது நடிப்புத் திறமைக்காக தேசிய விருதும் கிடைத்தது.

அதன் பிறகு கோலிவுட், டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் இப்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார். தற்போது அவர் சினிமாவில் நுழைந்து பத்து வருடங்கள் நிறைவு செய்திருக்கிறார். இதற்காக தனது அம்மா, அப்பா, இயக்குநர் பிரியதர்ஷன், நண்பர்கள், மீடியா, ரசிகர்கள், தன்னை கேலி செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in