பிகினியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... தனித்தீவில் பிரபல தமிழ்பட நடிகை!

கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்

பிப்ரவரி 18ம் தேதி பிறந்தநாள் கொண்டாடுகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். பிறந்தநாள் மாதம் தொடங்கி விட்டதோடு, காதலர்களின் மாதமாகவும் இருப்பதால் இந்த காதலர் தினத்துக்கு தனது காதல் கணவர் நடிகர் அசோக் செல்வனுடன் ரிலாக்ஸாக தாய்லாந்து நாட்டில் தனித்தீவில் கொண்டாட கிளம்பி சென்றிருக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். தனித்தீவில் பிகினியில் தனது கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

தாய்லாந்தில் கீர்த்தி, அசோக்...
தாய்லாந்தில் கீர்த்தி, அசோக்...

நடிகர் அசோக்செல்வனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இவர்களது காதல் விஷயம் யாருமே எதிர்பார்த்திராத நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் இந்த காதல் ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

சமீபத்தில், இவர்கள் ஜோடியாக நடித்த ‘ப்ளூஸ்டார்’ படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் புரோமோஷன், ரிலீஸ் என பிஸியாக இருந்தவர்கள் இப்போது காதலர் தினமும், கீர்த்தியின் பிறந்தநாளும் அடுத்தடுத்து வருவதால், தாய்லாந்து நாட்டிற்கு கொண்டாட கிளம்பியிருக்கிறது ஜோடி.

அங்கு பிகினி, கார்ன்ரோஸ் முடி, சன் லைட், கணவருடன் காதலுடன் நேரம் செலவிடுவது எனத் தனக்குப் பிடித்த காதலர்களின் மாதத்தில், பிடித்தமான விஷயங்களைச் செய்து வருகிறேன் எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி.

முன்பு அசோக்செல்வன் பிறந்தநாளுக்கும் இதேபோன்று வெளிநாட்டிற்குச் சென்று இந்த ஜோடி நேரம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in