திருமண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை கார்த்திகா
நடிகை கார்த்திகா

நடிகை ராதாவின் மூத்த மகளும் , கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் கதாநாயகியுமான நடிகை கார்த்திகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'கோ' படத்தில் ஜீவாவுடன் கார்த்திகா
'கோ' படத்தில் ஜீவாவுடன் கார்த்திகா

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த ’கோ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’அன்னக்கொடி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’புறம்போக்கு என்ற பொதுவுடமை’ ஆகிய படங்களில் நடித்தார். ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கார்த்திகா வெளியிட்ட புகைப்படம்
கார்த்திகா வெளியிட்ட புகைப்படம்

இந்த நிலையில், ​​கார்த்திகா மோதிரம் அணிந்த படி தனது வருங்கால கணவரை கட்டிப்பிடிக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், அவரது கணவர் பற்றிய விவரங்களை கார்த்திகா வெளியிடவில்லை. மேலும் அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வெளியான இந்த படத்தால் நடிகை கார்த்திகாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in