அம்பேத்கர் Vs காந்தி... நடிகை ஜான்வி கபூர் பகிர்ந்த சுவாரஸ்யம்!

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

அம்பேத்கரும், காந்தியும் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் மட்டுமல்லாது, தென்னிந்திய படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படத்தின் மூலம் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகிறார் ஜான்வி.

நடிகை ஜான்வி கபூர்
நடிகை ஜான்வி கபூர்

அதேபோல, தமிழில் சிலம்பரசனின் 48வது படத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. படங்களில் நடிப்பதைத் தாண்டி, பிரபலங்கள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லும் விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அப்படித் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம் ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது, நேர்காணல் ஒன்றில் எந்த இரண்டு தலைவர்கள் விவாதம் செய்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜான்வி, மகாத்மா காந்தியும் அம்பேத்கரும் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என அவர் பதில் சொல்லியிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதில் அவர் பேசியிருப்பதாவது, “காந்தி, அம்பேத்கர் இருவருமே தேசம் குறித்தான அக்கறையுடன் இருந்தவர்கள். இவர்கள் எப்படி தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள். நாட்டை வளர்ச்சி நிலைக்கு எடுத்து செல்ல என்ன யோசிப்பார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in