அம்பானி மகன் திருமணம்; ஹாலிவுட் பாடகியுடன் குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்... வைரல் வீடியோ!

ரிஹானாவுடன் ஜான்வி...
ரிஹானாவுடன் ஜான்வி...

ஆனந்த் அம்பானி திருமணக் கொண்டாட்டத்தில் நடிகை ஜான்வி கபூர் பிரபல ஹாலிவுட் பாடகி ரிஹானாவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அம்பானி குடும்பம்
அம்பானி குடும்பம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சண்ட் என்பவருக்கும் ஜூலை மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக குஜராத்தில் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி இருக்கிறது. மூன்று நாட்களுக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி நாளை நிறைவு பெறுகிறது. இதற்காக, அலியாபட், கரீனா கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே எனப் பாலிவுட்டின் முக்கியப் பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை மேலும் கொண்டாட்டமாக்க பாலிவுட் பாடகி ரிஹானாவும் வந்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் ஆடி, பாடி விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக மட்டும் இவருக்கு ரூ. 50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை 5 மணியளவில் ரிஹானா பாடல் பாட திட்டமிடப்பட்டிருந்தது. இதில்தான் ரிஹானாவுடன் நடிகை ஜான்வி கபூர் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். ’மயிலு’ மகளின் இந்த குத்தாட்டம்தான் இளசுகள் மத்தியில் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in