கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

இஷா தியோல்- பரத் தக்தானி
இஷா தியோல்- பரத் தக்தானி
Updated on
2 min read

’ஆய்த எழுத்து’ பட கதாநாயகியும் பாலிவுட்டில் தர்மேந்திரா- ஹேமமாலினி ஜோடியின் மகளுமான இஷா தியோல் தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்துள்ளார்.

'ஆய்த எழுத்து’ படத்தில்...
'ஆய்த எழுத்து’ படத்தில்...

கடந்த 2004ம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் சூர்யா, சித்தார்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘ஆய்த எழுத்து’. இதில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக இஷா தியோல் நடித்திருப்பார். இதில் சூர்யா-இஷா ஜோடி பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது.

சமீபத்தில் அமீர்கான் மகள் திருமணத்தின் போது மும்பையில் சூர்யா, இஷா கலந்து கொண்டனர். அவர்கள் ஜோடியாக இருந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. பாலிவுட்டின் சூப்பர் ஜோடிகளான தர்மேந்திரா- ஹேமமாலினியின் மகள்தான் இஷா. இவர் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

குடும்பத்துடன்...
குடும்பத்துடன்...

இந்த சூழ்நிலையில்தான் தனது கணவர் பரத் தக்தானியைப் பிரிவதாக அறிவித்துள்ளார் இஷா. இந்த ஜோடிக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகக்கூடிய நிலையில், இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இஷா- பரத் விவாகரத்து சர்ச்சை ஊடகங்களில் சுற்றி வந்த நிலையில் இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் இருவரும் தெரிவித்திருப்பதாவது, ‘நாங்கள் இருவரும் ஒப்புதலோடு பிரிந்து விட முடிவு செய்திருக்கிறோம். எங்களின் இந்த பிரிவு எங்கள் குழந்தைகளைப் பாதித்து விடக்கூடாது. ஏனெனில், அவர்களுடைய நலனும் எங்களுக்கு முக்கியம். இந்த சமயத்தில் எங்களின் பிரைவசியை மதிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.

42 வயதாகும் இஷாவுக்கு, ராத்யா மற்றும் மிராயா என்ற இரு மகள்கள் உண்டு. கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in