இது ஏழாவது மாதம்... கணவருடன் கிளப்பில் குத்தாட்டம் போட்ட அமலாபால்; வைரல் வீடியோ!

அமலாபால்.
அமலாபால்.

கிளப்பில் தனது கணவருடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார் நடிகை அமலாபால். தனது ஏழாவது மாதம் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெகத் தேசாயுடன் திருமணம் முடித்த சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியை அறிவித்தார் நடிகை அமலாபால். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார் அமலா.

இவருக்குப் பக்க பலமாக இவரது கணவர் ஜெகத்தும் அமலா பால் உடனிருந்து கவனித்தார். இந்த சூழ்நிலையில்தான் பிருத்விராஜூடன் இவர் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் புரோமோஷன் பணிகளில் கடந்த வாரம் ஆக்டிவாக கலந்து கொண்டார் அமலா பால்.

கணவருடன் அமலாபால்...
கணவருடன் அமலாபால்...

பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பேட்டி என பிஸியாக இருந்தவர் இப்போது அம்மா, கணவருடன் ரிலாக்ஸாக கிளப்பில் செம ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘இப்படித்தான் எங்கள் ஏழாவது மாதத்தை நாங்கள் நடனத்துடன் மகிழ்ச்சியாக வரவேற்றோம். உங்கள் எல்லோருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ எனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமலா பால்.

”திருமணம், குழந்தை என சில காலம் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். சீக்கிரமே நடிப்புக்கு கம்பேக் கொடுப்பேன்” என சமீபத்திய பேட்டிகளில் அவர் குறிப்பிட்டிருந்ததார்.

இதையும் வாசிக்கலாமே...

'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!

‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!

17 வயது சிறுமி பலாத்கார புகார் பின்னணியில் அரசியல் சதியா? மவுனம் கலைத்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in