தமிழகத்தை அடுத்து நடிகர் விஜய், கேரளாவிலும் தனது அரசியல் களத்தை விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகளில் அவர் மும்முரமாக இறங்கியுள்ளார்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சியை அறிவித்தப் பின்னர் நடிகர் விஜய் வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் படங்களில் நடிப்பதை விட்டு விலகி முழு நேரமாக அரசியலில் இறங்கவும் இருக்கிறார் விஜய்.
தற்போது 'GOAT' படப்பிடிப்புத் தளத்தில் ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான், விஜய் கேரளாவிலும் தனது கட்சியை பலப்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில், கேரளாவில் உள்ள 14 விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்டப் பல பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க தலைவர்களும் இருப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்தை அவர் கேரளாவிலும் விரிவு படுத்துவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் செய்தது போலவே மருத்துவ உதவி, கல்வி உதவி, தலைவர்களின் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் போன்ற பல விஷயங்கள் கேரளாவிலும் செய்ய வேண்டும் என்பவை இந்தச் சந்திப்பில் அறிவுறுத்தப்படும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி விஜயின் கேரள ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?
அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!
உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்
தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!