அரசியல் கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிக்கு நன்றி சொன்ன விஜய்!

விஜய்
விஜய்

தனது அரசியல் கட்சி தொடக்கத்திற்கு வாழ்த்துக் கூறிய ரஜினிக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் ரஜினி...
விஜய் மற்றும் ரஜினி...

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சியை அறிவித்தப் பின்னர், அவருக்கு பல்வேறு தளங்களில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மேலும் நடிகர் விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளும் உற்று நோக்கப்படுகிறது.

ஒருபக்கம் வாழ்த்துகள் குவிந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் ரீதியாக விஜயின் நிலைப்பாடு என்ன, அவர் மக்கள் பிரச்சினைகளுக்கு எப்படி குரல் கொடுக்கிறார் போன்ற விஷயங்களையும் பார்க்க வேண்டும் என்ற விஷயத்தையும் பலர் சொல்லி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில்தான் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்து வந்த ரஜினிகாந்திடம் விஜயின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

விஜய் - ரஜினி
விஜய் - ரஜினி

அதற்கு ரஜினிகாந்த் புன்னகையுடன் விஜய்க்குத் தனது வாழ்த்துகளை கூறினார். இதனையடுத்து, ரஜினியின் வாழ்த்துக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் வலுவாக எழவே, ரஜினி சொன்ன ‘காக்கா-கழுகு’ கதை விஜயை குறி வைத்துதான் என சர்ச்சை கிளம்பியது. அப்பாவைப் போல வர ஆசைப்படுவதில் என்ன தப்பு என விஜயும் கேட்டார். இப்படி ரஜினி-விஜய் மத்தியில் எழுந்த சிறு சலசலப்பு இந்த வாழ்த்து செய்தியால் மறைந்துவிட்டது என்கின்றனர் ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...


ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in