#RIPDanielBalaji: படத்துல தான் கத்தி, நிஜத்துல பக்தி...பஞ்ச் பேசி பாராட்டிய விஜய் வீடியோ வைரல்!

விஜய்- டேனியல் பாலாஜி
விஜய்- டேனியல் பாலாஜி

படத்துலதான் இந்த கத்தி எல்லாம், நிஜத்துல பக்தி என மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் ஆன்மிக முகத்தைக் குறிப்பிட்டு நடிகர் விஜய் பாராட்டியுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, இவர் கட்டிய கோயிலுக்கு ‘கேஜிஎஃப்’ ஹீரோ யஷ் பொருளாதார உதவி செய்துள்ளார்.

மாரடைப்பால் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் நினைவுகள் குறித்து ரசிகர்கள் பலரும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ‘பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய், டேனியல் பாலாஜி பற்றி புகழ்ந்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் விஜய், “டேனியல் பாலாஜியை எல்லோருக்கும் சாவடி அடிச்சு சமாதி கட்டும் வில்லனாகதானே தெரியும்? ஆனால், அவர் ஆவடியில் இப்போ ஒரு அம்மன் கோயில் கட்டிட்டு இருக்கார். படத்துலதான் இந்த கத்தி எல்லாம். நிஜத்துல அவர் ரொம்பவே பக்தி” என பஞ்ச் வசனம் பேசி பாராட்டியுள்ளார். தன் அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி, சென்னை ஆவடியில் ஶ்ரீ ரக்தூள் அங்காள பரமேஸ்வரி என்ற அம்மன் ஆலயம் ஒன்றை கட்டி இருந்தார். இதன் கும்பாபிஷேகம் மார்ச் 9-ம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலுக்குத்தான் ‘கேஜிஎஃப்’ ஹீரோ யஷ் பொருளாதார உதவி செய்துள்ளார். இதைக் குறிப்பிட்டு பழைய பேட்டி ஒன்றில் டேனியல் பாலாஜி, “ 'கிராதகா' படத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்பேன். அந்த சமயத்திலேயே எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது.

அதனால், ’கேஜிஎஃப்’ படத்தில் நடிப்பதற்காக யஷ் என்னிடம் கேட்டார். அந்த சமயத்தில் கோயில் கட்டிக் கொண்டிருந்ததால் என்னால் டேட் தருவது கஷ்டம் எனச் சொல்லி மறுத்துவிட்டேன். ஆனால், அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் நான் கட்டிய கோயிலுக்கு அவர் சில லட்சங்களில் பணம் போட்டுவிட்டார்” எனச் சொல்லி நெகிழ்ந்திருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in