இயக்குநர் கே.வி.ஆனந்த் வீட்டிற்கு நடிகர் சூர்யா திடீர் விசிட்... நெகிழ்ந்த புதுமண ஜோடி!

கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...
கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...

இயக்குநர் கே.வி.ஆனந்த் மகள் திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்து கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில் அவர்களை குடும்பத்துடன் நேரில் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...
கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...

‘வாடிவாசல்’, சுதா கொங்கராவின் படம் என அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நடிகர் சூர்யா, தந்தை சிவகுமாருடன் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் ஹிட் பட வரிசையில் நந்தா, பிதாமகனுக்கு எத்தனை முக்கியத்துவம் உள்ளதோ அதை போலவே கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ படமும் சூர்யாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி சென்றது. சூர்யாவின் ஸ்டைலிஷான நடிப்பு, பாடல், திரைக்கதை என எல்லாமே சரிவிகித கலவையாக அமைந்து, ‘அயன்’ இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்தது. இதற்கடுத்து கே.வி.ஆனந்த் -சூர்யா இருவரும் இணைந்து ‘காப்பான்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தனர்.

கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...
கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீரென காலமானது திரையுலகை அதிர்ச்சியடைய செய்தது. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைந்தாலும் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் நடிகர் சூர்யா.

கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...
கே.வி.ஆனந்த் குடும்பத்துடன் சூர்யா...

இந்நிலையில், இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சாதனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் திரையுலகைச் சேர்ந்தப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார். ஆனால், சூர்யாவின் கரியரில் முக்கிய படங்களைக் கொடுத்த கே.வி.ஆனந்த் மகள் திருமணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லையே என்ற விமர்சனம் எழுந்தது.

அப்போது நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது தந்தையுடன் கே.வி.ஆனந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களை சந்தித்து, வாழ்த்தி அன்பளிப்பு கொடுத்து நெகிழ செய்திருக்கிறார் நடிகர் சூர்யா.


இதையும் வாசிக்கலாமே...

இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!

தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!

தமிழகமே அதிர்ச்சி... ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in