சிவகார்த்திகேயனின் வெறித்தனமான வொர்க் அவுட்... கமல் தயாரிப்பில் ‘எஸ்கே21’ அப்டேட் இதோ!

‘எஸ்கே21’
‘எஸ்கே21’

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரக்கூடிய ‘எஸ்கே21’ படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்காக வெறித்தனமாக சிவகார்த்திகேயன் வொர்க் அவுட் செய்யும்படியான கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

‘எஸ்கே 21’  படக்குழு
‘எஸ்கே 21’ படக்குழு

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் கட்டுமாஸ்தான உடற்கட்டுடன் ராணுவ வீரராக இதில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தேசபக்தி அடிப்படையில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமான ‘எஸ்கே21’ படப்பிடிப்பின் பெரும்பகுதி காஷ்மீரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் மட்டுமல்லாது சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடையக் கூடிய நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். வருகிற 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் அவரது அடுத்தப் படம் குறித்தான அறிவிப்பும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில்தான், இந்தப் படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து உடலை மாற்றியது, துப்பாக்கிப் பயிற்சி முறையாக எடுத்தது போன்றவற்றின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. ‘ஹார்ட் ஆன் ஃபயர்’ என்ற கேப்ஷனுடன் இந்த பயணம் குறித்து இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in