நடிகர் சிவகார்த்திகேயன் ’எஸ்கே21’ படத்திற்காக பீஸ்ட் மோடில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. மேலும், அவரது பிறந்தநாளுக்காக ‘எஸ்கே21’ டைட்டில் டீசரும் வெளியாக இருக்கிறது.
படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடை ஏற்றுவதும், இறக்குவதும் நடக்ககூடிய ஒன்றுதான். அப்படித்தான் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21ஆவது படத்திற்காக பீஸ்ட் மோடில் கடுமையாக உடற்பயிற்சி செய்து அசத்தலான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்தியேன் தனது 21 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதில் இராணுவ வீரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்காகத் தனது உடலை கடுமையான உடற்பயிற்சி மூலம் முழுவதுமாக மாற்றி இருக்கிறார்.
மிகச்சாதாரணமாக இவர் தனது உடற்பயிற்சியைத் தொடங்க அடுத்தடுத்த நாட்களில் உடலை கட்டுப்கோப்பாக இராணுவ வீரரைப் போல இறுக்கமாக மாற்றியுள்ளார். வெயிட் லிஃப்ட்டிங், கன் ஷூட் என தேவையான பயிற்சிகளையும் பெற்றுள்ளார் சிவா. ’கடின உழைப்பு எதையும் செய்யும் திறனைக் கொண்டு வரும்’ என்ற கேப்ஷனுடன் ‘ஹார்ட்ஸ் ஆன் ஃபயர்’ என்ற டேக்குடன் சிவகார்த்திகேயனின் டிரான்ஸ்ஃபர்மேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவரது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், ’எஸ்கே21’ படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!
தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!