பிரதமர் மோடி பயோபிக்கில் நடிக்கிறாரா சத்யராஜ்?!

சத்யராஜ்- மோடி
சத்யராஜ்- மோடி

பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் காலை முதலே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ஜானராகவே இருக்கிறது. பெரியார், காமராஜர், கிரிக்கெட்டர் தோனி, நடிகை சாவித்ரி எனப் பல ஜாம்பவான்களின் கதைகள் படமாகியிருக்கிறது.

சத்யராஜ்
சத்யராஜ்

அந்த வரிசையில் பிரதமர் மோடியின் பயோபிக் உருவாக உள்ள நிலையில், இந்த படத்தில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என்கிற செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. நடிகர் சத்யராஜ் இதற்கு முன்பு பெரியாரின் பயோபிக்கில் பெரியாராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரியாரிஸ்ட்டான சத்யராஜ் மோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதாக வெளியான தகவல் திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்தது.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

இந்நிலையில், இது குறித்து பேசிய நடிகர் சத்யராஜ், “எனக்கும், இது புது செய்தி. வாய்ப்பு வந்தால் பின்னர் யோசிக்கலாம். நாத்திக கருத்துகளை அதிகம் பேசிய எம்.ஆர்.ராதா ஏகப்பட்ட படங்களில் ஆன்மிகவாதியாக நடித்ஹ்டுள்ளார்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

குஸ்தி களமான நாடாளுமன்றம்... எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை; அதிர்ச்சி வீடியோ!

வரலாற்றில் இடம் பிடித்த கணினி ஆபரேட்டர்... 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவில் மாஸாக உருவாகும் ‘GOAT'... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in