பாஜகவில் சேரப் போகிறேனா? - உண்மையை உடைத்த நடிகர் சத்யராஜ் மகள்!

சத்யராஜ், திவ்யா
சத்யராஜ், திவ்யா

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பாஜகவில் சேர இருக்கிறார் என்ற செய்தி ஊடகத்தில் உலா வந்தது. இதன் உண்மைத் தன்மை குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

திவ்யா
திவ்யா

சினிமாவில் இருக்கும் பிரலங்களின் வாரிசுகள் அவர்கள் நடிக்கவும், பிறதுறைகளுக்கும் வருவது வழக்கம்தான். அப்படித்தான் நடிகர் சத்யராஜின் மகன் சிபிசத்யராஜூம் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது மகள் திவ்யா மருத்துவராக இருக்கிறார். ஊட்டச்சத்து நிபுணராக வலம் வரும் இவர் ‘மகிழ்மதி’ என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கும் பணியையும் செய்து வருகிறார்.

இது இல்லாமல் இவருக்கு அரசியலிலும் ஆர்வம் உண்டு. பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றுபவர் நடிகர் சத்யராஜ். அப்படி இருக்கும் போது அவரது மகள் திவ்யா பாஜகவில் இணைய இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக இணையத்தில் வலம் வந்தது.

திவ்யா அறிக்கை
திவ்யா அறிக்கை

இதற்குதான் தற்போது திவ்யா விளக்கம் கொடுத்துள்ளார். 'எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என ஏற்கெனவே தெரியப்படுத்தினேன். உடனே எல்லோரும், ’எம்.பி ஆக அரசியலுக்கு வருகிறீர்களா? மந்திரி ஆசை உண்டா? சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா?’ எனப் பல கேள்விகள் வந்தன. நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்ல வேண்டும் என்றோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்காக வேலை செய்ய வேண்டும், களப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசையில் அரசியலுக்கு வர நினைக்கிறேன். களப்பணிகள் செய்தும் வருகிறேன்.

‘மகிழ்மதி’ என்ற இயக்கம் மூன்று வருடங்களுக்கு முன்னால் ஆரம்பித்து அதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறேன். நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை’ என்றார். மேலும், பிஜேபியில் இணைய விருப்பம் இல்லை எனக் கூறியுள்ள அவர் தேர்தல் முடிந்ததும் எந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in