குழந்தை பராமரிப்பாளருக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்... வாய் பிளக்க வைத்த நடிகர் ராம்சரண்!

குடும்பத்துடன் உபாசனா...
குடும்பத்துடன் உபாசனா...

தங்களுடைய குழந்தையைப் பராமரித்துக் கொள்பவருக்கு லட்சக்கணக்கில் சம்பளத்தை வழங்கி வருகிறது ராம்சரண் -உபாசனா தம்பதி. இந்த விஷயம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

சாவித்ரி...
சாவித்ரி...

தெலுங்குத் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவரது மனைவி உபாசனா. திருமணம் ஆகி கிட்டத்தட்ட 11 வருடங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்த இந்தத் தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு கிளின் காரா எனப் பெயரிட்டுள்ளனர். உபாசனாவுக்கு முதன் முதலில் இந்தப் பெயரைத்தான் அவரது பெற்றோர் வைக்கத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அந்த ஆசை நிறைவேறாமல் போகவே தங்களது பேத்திக்கு இந்த கிளின் காரா என்ற பெயரை வைத்து அழகு பார்த்தனர்.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் வாரிசுதான் உபாசனா. இப்படியான சூழ்நிலையில்தான் ராம்சரண் சினிமாவிலும், உபாசனா மருத்துவமனை நிர்வாகத்திலும் பிஸியாக இருப்பதால் தங்களது குழந்தையைப் பார்த்துக் கொள்ள கேர் டேக்கர் ஒருவரை நியமித்துள்ளனர்.

சாவித்ரி...
சாவித்ரி...

இவரது பெயர் சாவித்ரி. இவர் இதற்கு முன்பு பாலிவுட் நடிகை கத்ரீனா உள்ளிட்ட சில பிரபலங்களின் குழந்தைகளைப் பராமரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைப் பராமரிப்பில் முன் அனுபவமுள்ள இவரைத்தான் தங்கள் குழந்தையைப் பராமரிக்க நியமித்துள்ளது ராம்சரண்- உபாசனா ஜோடி. இவருக்கு மாதம் ஐந்து லட்ச ரூபாயை சம்பளமாகக் கொடுத்து வருகின்றனர் என்ற செய்திதான் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in