
இந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் சென்று நடிகை ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன் என்று நடிகர் ராதாரவி பேசிய வீடியோவை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜயின் 'லியோ' படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். இனிமேல் மன்சூர் அலிகானுடன் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்தார்.
மன்சூர் அலிகான் பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மகளிர் ஆணையம், பாடகி சின்மயி உள்பட பலரும் கண்டித்தும் இவர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நான் செய்தது தவறு இல்லை, அது தவறாக காட்டப்பட்டு விட்டது என கூறி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
இந்த சமயத்தில் " மன்சூர் அலிகான் பேசியது மட்டுமே கண்டிக்கத்தக்கது அல்ல, இவரை போல் இதற்குமுன் பலரும் நடிகைகள் குறித்து மோசமாக பேசியுள்ளனர். அதில் ஒருவர் தான் ராதாரவி" என்று பாடகி சின்மயி கூறியதால் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், அது தொடர்பாக பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் ராதாரவி பேசிய வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராதாரவி," எனக்கு இந்தி தெரியாது. தமிழ் மட்டும் தான் தெரியும். இந்தி தெரிந்திருந்தால் பாலிவுட் சென்று நடிகை ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன்.
எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தான் படத்தில் கொடுக்கின்றனர். வேறு என்ன எனக்கு கடவுள் வேடமா படத்தில் கொடுக்கிறார்கள்" என அவர் பேசினார். பாடகி சின்மயி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக வைரலாகி வருவதுடன் பெரும் திரையுலகினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா
நெகிழ்ச்சி... சாவிலும் இணைபிரியாத அக்கா, தம்பி!
அடுத்த சர்ச்சை... தேசிய கீதத்தை அவமானப்படுத்திய மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான் தப்புன்னா... ரஜினி பேசுனதும் தப்பு தான்!
அடாவடி வசூல்... கழிவறை கட்டண குத்தகைதாரருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து தீர்ப்பு!