அரசியலில் குதிக்கும் நடிகர் பிரசாந்த்? - திருமாவுடன் திடீர் சந்திப்பு!

பிரசாந்த் தியாகராஜன் திருமாவளவன்
பிரசாந்த் தியாகராஜன் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நடிகர் பிரசாந்த் சந்தித்து இருக்கிறார். ஏற்கெனவே விஜய் அரசியல் குறித்துப் பேசியவர், இப்போது திருமாவை சந்தித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அரசியல் யூகத்தைக் கிளப்பி இருக்கிறது.

பிரஷாந்த்
பிரஷாந்த்

சினிமாவில் பேரும் புகழும் கிடைத்தப் பின்பு பல பிரபலங்கள் அரசியல் களம் நோக்கி படையெடுப்பதைப் பார்த்து வருகிறோம். நடிகர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், விஜய் எனப் பல உதாரணங்கள் உண்டு. இதில் நடிகர் பிரசாந்தும் இணையப் போகிறாரா என்ற சந்தேகம் கடந்த சில நாட்களாக ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதற்குக் காரணம் அவரின் செயல்பாடுகளும் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தும் அவரது பேச்சும்தான்.

கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின்போது தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியவர், சமீபத்தில் தனது ரசிகர்கள் பலருக்கும் ஹெல்மெட் வழங்கினார். அப்போது விஜயின் அரசியல் கட்சிக் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

திருமாவுடன் சந்திப்பு
திருமாவுடன் சந்திப்பு

அதற்கு அவர், ’விஜய்யுடன் அரசியல் பற்றி எல்லாம் பேசுவேன். ஆனால், நண்பருடன் பேசுவதை வெளியே சொன்னால் நல்லா இருக்காதே! எனக்கு அரசியலுக்கு வரும் தைரியமில்லை. ஆனால், முடிந்த அளவு மக்களுக்கு நல்லது செய்வேன்’ என்றார். அரசியல் குறித்து பிரசாந்த் இப்படிக் கூறியிருந்தாலும், அவர் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தனது தந்தை தியாகராஜனுடன் சேர்ந்து சந்தித்து இருக்கிறார். இதுதான் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரசாந்தின் அரசியல் குறித்த சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இது பொதுவான சந்திப்பு என்றே சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in