“இன்னைக்கு லைன்ல நிற்கலைன்னா... வருஷம் பூரா லைன்ல நிற்கணும்...” மாற்றம் வரப்போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

”ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது. இன்று ஒருநாள் லைனில் நின்று வாக்களிக்கவில்லை என்றால், வருஷம் முழுவதும் லைனில் நிற்பது போல வரும்” என பெங்களூருவில் வாக்களித்தப் பின்பு நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம் என மொத்தம் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என 88 தொகுதிளில் நடந்து வருகிறது. பெங்களூருவில் காலையிலேயே தனது வாக்கினை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், நாடாளுமன்றத்தில் என்னைப் போன்ற சாமானியர்களின் குரலாக யார் இருப்பார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமைதான் தனது வாக்கு என்றார். மேலும், ”நீங்கள் நம்பும் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். கடந்த பத்து ஆண்டுகளாக வெறுப்பு அரசியலைதான் பார்த்து வந்தேன்.

அப்படியான பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராக மாற்றத்திற்காக வாக்களித்துள்ளேன். காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள். ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது என்பது தெரிகிறது. இன்று ஒருநாள் நீங்கள் லைனில் நிற்கவில்லை என்றால், வருடம் முழுக்க லைனில் நிற்க வேண்டியிருக்கும்.

உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய நீங்கள் ஓட்டு போட வேண்டும். இல்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையையும் இழந்து விடுவீர்கள்” என்று கூறியுள்ளார். பின்பு பெங்களூருவில் விசிக தலைவர் திருமாவளவனையும் சந்தித்து உரையாடினார் பிரகாஷ்ராஜ்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in