விஜயகாந்துடைய லெஃப்ட் கிக் ரகசியம் இதுதான்... நடிகர் முத்துக்காளை பேட்டி!

நடிகர் முத்துக்காளை
நடிகர் முத்துக்காளை

நகைச்சுவை கலைஞராகப் பரவலாக அறியப்பட்ட நடிகர் முத்துக்காளையின் இன்னொரு முகம் ஃபைட்டர். தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் சினிமா பயணம் பற்றி தன்னுடைய அனுபவங்களை இந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் முத்துக்காளை
நடிகர் முத்துக்காளை

தன்னுடைய ஊரில் சிலம்பக்கலை கற்றுக்கொண்ட முத்துக்காளை அதைப் பயன்படுத்தி சினிமாவில் ஃபைட்டராக நுழைய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருக்கிறார். ஆனால், சினிமாவில் ஃபைட்டராக நுழைய வெறும் சிலம்பாட்டம் மட்டுமே போதாது என்பதை உணர்ந்தவர், கராத்தே உள்ளிட்டப் பல தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

ஃபைட்டராக இருந்து பின்பு நடிகராகவும் சினிமாவில் வளர்ந்தவர் சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்தான நினைவுகளை ‘காமதேனு’வுடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, “ஃபைட் யூனியனுக்காக நடிகர் விஜயகாந்த் எவ்வளவோ நல்ல விஷயங்கள் செய்து கொடுத்திருக்கிறார். அவர் மறைந்தது நிச்சயம் சினிமாவுக்கு பேரிழப்புதான்.

படங்களில் இதற்கு முன்பு நிறைய சண்டைக் காட்சிகள் செய்து விஜயகாந்த் சாருக்கு தோள்பட்டை இறங்கி இருந்தது. அது திரையில் தெரியக்கூடாது என்பதற்காகவே லெஃப்ட் கிக் செய்ய ஆரம்பித்தார். பின்பு அதுவே அவரின் ஸ்டைல் ஆகிவிட்டது. ரசிகர்களுக்கும் அது பிடித்திருந்தது. விஜயகாந்தின் இறப்புக்குப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தார்கள். வடிவேலும் தன்னுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், காலம் கடந்து இனி செய்வதில் பயனில்லை. அவருடைய கேரக்டர் அப்படித்தான். வடிவேலு விஜயகாந்த் இறப்புக்கு மட்டுமில்லை, இதற்கு முன்பு விவேக் உள்ளிட்டப் பலரின் இறப்புக்கும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in