லிவிங்ஸ்டனை வீட்டிற்கு அழைத்து உபசரித்த ரஜினி!

லிவிங்ஸ்டனை வீட்டிற்கு அழைத்து உபசரித்த ரஜினி!

90களில் வில்லன் நடிகராக அறிமுகமாகி, அதன் பின்னர் ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும் திரைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தில், ரஜினியும் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பாக ‘வீரா’, சிவாஜி, அண்ணாத்த படங்களில் ரஜினியுடன் லிவிங்ஸ்டன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஜினியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் லிவிங்ஸ்டன். பொதுவாக ரஜினியின் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்களோ, அவருடன் நடிக்கும் நடிகர்களோ, ரஜினியிடம் நேரம் கேட்டு, அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பது வழக்கம்.

இந்நிலையில், நடிகர் லிவிங்ஸ்டனை ரஜினியே, தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து, அவரை வரவேற்று உபசரித்துள்ளார். ரஜினியை லிவிங்ஸ்டன் சந்தித்தப் புகைப்படத்தை சோஷியல் சந்தோஷத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா, இந்த சந்திப்பு குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து, சூப்பர் ஸ்டாரே என் தந்தையை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். ரஜினி சாரின் மீதான அன்பு நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாள் விரைவில் அவரை சந்திப்பேன் என்று பகிர்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in