கமல் படத்தால் வந்த சிக்கல்... அப்செட்டில் தனுஷ் ரசிகர்கள்!

கமல், தனுஷ்
கமல், தனுஷ்

நடிகர் தனுஷின் ‘ராயன்’ படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. இப்போது கமல் படம் கொடுத்த சிக்கலால் ’ராயன்’ பட ரிலீஸ் இன்னும் தள்ளிப் போயிருக்கிறது.

இயக்குநர், நடிகர் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் தனுஷ். ‘ப. பாண்டி’ படத்திற்குப் பிறகு ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ். இதற்கடுத்து அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படம் உருவாகி இருக்கிறது. தனுஷின் 50-வது படமான ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதன் ரிலீஸ் எப்போது என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ராயன் தனுஷ்
ராயன் தனுஷ்

சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் காரணமாக அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டது. கோடை விடுமுறையை மனதில் கொண்டு, மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது அதிலும் சிக்கல் எழுந்துள்ளது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தை ஜூன் மாதம் வெளியிடலாம் என் தீர்மானித்தது படக்குழு.

ஆனால், ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ வெளியாகிறது. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தோடு தனுஷ் போட்டி போட விரும்பவில்லையாம். இதனால், ஜூன் மாதமும் ‘ராயன்’ ரிலீஸ் வேண்டாம் என முடிவெடுத்து ஜூலைக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

மே மாத இறுதியில் இருந்து ’ராயன்’ படத்திற்கான புரமோஷன்கள் தொடங்க இருக்கிறது. ‘ராயன்’ படத்திற்காக மொட்டை அடித்து வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார் தனுஷ். அவரது இயக்கத்தில் வரும் இரண்டாவது படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், கமல் படத்தால் ’ராயன்’ ரிலீஸ் தள்ளிப் போகிறதே என அப்செட்டில் உள்ளனர் ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in