தனுஷ், ராஷ்மிகா நடிக்கும் 'டி 51' படப்பிடிப்பு வீடியோ லீக்... படக்குழு அதிர்ச்சி!

தனுஷ், ராஷ்மிகா
தனுஷ், ராஷ்மிகா

நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'டி 51' படப்பிடிப்பு வீடியோ லீக்காகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

’டி51’ படப்பூஜையில் நடிகர் தனுஷ்
’டி51’ படப்பூஜையில் நடிகர் தனுஷ்

நடிகர், இயக்குநர் என தற்போது இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் நடிகர் தனுஷ். தனது ஐம்பதாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ’ராயன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக கடந்த சில தினங்களாக வெளியாகி வருகிறது.

பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா, சரவணன், செல்வராகவன் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இயக்குநராக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ படத்தையும் இயக்குகிறார். மேலும் தனது 51வது படமாக சேகர் கமுலா இயக்கத்தில் தெலுங்கு படம் ஒன்றிலும் தனுஷ் நடித்து வருகிறார்.

'வாத்தி' படத்திற்குப் பிறகு தனுஷ் அடுத்து நடிக்கும் தெலுங்கு படம் இது. ராஷ்மிகா இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் பூஜை சமீபத்தில் நடந்து படப்பிடிப்புத் தொடங்கியது. திருப்பதியில் நடந்த இதன் படப்பிடிப்பில் அடர் தலைமுடி மற்றும் தாடியுடன் நடிகர் தனுஷ் இருந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.

தற்போது முற்றிலும் வேறு கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் தனுஷ். ஹேர்கட் செய்து மீண்டும் இளமைத் தோற்றத்திற்கு தனுஷ் மாறியுள்ளார். அவருக்கு ராஷ்மிகாவுடன் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படக்காட்சிகள் லீக்காகியுள்ளது போல தனுஷ் படத்தின் காட்சிகளும் லீக்காகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இந்திய நிறுவனங்கள் 10% சம்பள உயர்வை அறிவிக்கும்... குஷிப்படுத்திய கருத்து கணிப்பு முடிவுகள்!

படப்பிடிப்பில் நடிகையை அடித்த இயக்குநர் பாலா...பரபரப்பு வீடியோ!

தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் யானை... காவாலா பாட்டுக்கு கலக்கல் டான்ஸ்!

லீக்கானது ’வேட்டையன்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ... போலீஸ் சீருடையில் மாஸாக வரும் ரஜினி!

அடடே மனோகர் திடீர் மறைவு... ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in