அம்மா, அப்பாவுக்கு ஆச்சர்ய பரிசு... மனைவியோடு சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்த அசோக்செல்வன்!

குடும்பத்துடன் அசோக்செல்வன் - கீர்த்தி...
குடும்பத்துடன் அசோக்செல்வன் - கீர்த்தி...

தன்னுடைய அம்மா, அப்பாவுக்கு மனைவி கீர்த்தியுடன் இணைந்து புது கார் ஒன்றைப் பரிசளித்து மகிழ்வித்துள்ளார் நடிகர் அசோக்செல்வன். இதுகுறித்து அவரின் அம்மா மலர் பூரித்துள்ளார்.

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்:
அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன்:

கடந்த வருட இறுதியில் வந்த மிக்ஜாம் புயல் சென்னையைப் புரட்டி எடுத்தது. இதில் பலருடைய குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும், பலருடைய வாகனங்களும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதையும் பார்த்தோம். அப்படித்தான் நடிகர் அசோக்செல்வனுடைய பெற்றோர் காரும் பாதிக்கப்பட்டது. இதனை மனதில் வைத்து தன்னுடைய அம்மா-அப்பாவிற்காக புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்திருக்கிறார் அசோக்செல்வன்.

இதனை மனைவி கீர்த்தியுடன் சென்று அவர்களுக்கு சர்ப்ரைஸாகக் கொடுத்திருக்கிறார் அவர். மகன் தங்களை இப்படி மகிழ்வித்தது குறித்து அவரது அம்மா மலர் பூரிப்பாகப் பேசியிருக்கிறார்.

புது காருடன்...
புது காருடன்...

அவர் கூறியிருப்பதாவது, “அசோக்செல்வன் எங்கள் மீது எப்போதுமே அன்புள்ள மகன். அவனுக்கு முதல் படத்தில் ரூ.1 லட்சம் அட்வான்ஸ் கிடைத்தபோது கூட எனக்கு ரூ.12,000த்தில் புடவையும் ஜிமிக்கியும் வாங்கிக் கொடுத்தான். இப்போது இன்னும் பெரிய நடிகராக வளர்ந்தவுடன் எங்களை இன்னும் அதிகமா சந்தோஷப்படுத்தி இருக்கான். கடந்த மழை வெள்ளத்துல எங்க காரும் கடுமையா பாதிப்படைஞ்சது. சரி பார்த்தும் எங்களுக்கு அது செட் ஆகல. அதனால், நாங்க சிரமப்படக்கூடாது அப்படின்னு அசோக் அப்பாவுக்குப் பிடிச்ச டொயோட்டா ஹைக்ராஸ் ஹைப்ரிட் கார் வாங்கி பரிசு கொடுத்திருக்கான். இப்போ எங்க மருமகள் கீர்த்தி அன்பும் எங்களுக்கு கிடைக்கிறது ரொம்பவே சந்தோஷமான விஷயம்” என்று மகிழ்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

2 தொகுதிகள் தான்... திமுக கறார்: பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல் விசிக நிர்வாகிகளுடன் திருமா ஆலோசனை!

வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

பேருந்தில் நடந்த பயங்கர சம்பவம்.. நடிகை ஆண்ட்ரியா அதிர்ச்சி பேட்டி!

தபால் ஓட்டு... சீனியர் சிட்டிசன்களுக்கு முக்கிய அறிவிப்பு!

போதையில் தள்ளாடும் தமிழகம்... அரசின் மெத்தனப்போக்கு காரணமா? ஒன்று சேரும் எதிர்கட்சிகள்!?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in