தமிழகத்தில் மாற்றத்துக்கான முயற்சி... விஜயின் அரசியல் குறித்து 'பிக்பாஸ்' நடிகர் கருத்து!

விஜய் - ஆரி
விஜய் - ஆரி

"தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றத்திற்கான முயற்சிக்கும் நடிகர் விஜய்க்கும், அவரது கொள்கைகளுக்கும் வாழ்த்துகள்" என்று, 'பிக்பாஸ்' புகழ் நடிகர் ஆரி அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ஆரி
ஆரி

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பொன்னேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுன் இன்று பங்கேற்றார். அவர், கல்லூரியின் புதிய வளாகத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஆரி அர்ஜுன் கண்டு ரசித்தார். மேலும், மாணவ, மாணவிகளிடையே கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியில் நிர்வாகிகள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

ஆரி
ஆரி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆரி அர்ஜுன், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எப்படி அரசியலில் வருகிறோம் என்பது முக்கியமல்ல. அரசியலில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி இருக்கிறார். ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்காக முயற்சிக்கும் நடிகர் விஜய்க்கும், அவரது கொள்கைகளுக்கும் வாழ்த்துக்கள்.

கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகக்கூடாது. அவ்வாறு அடிமையாகும் மாணவர்களை, நண்பர்கள் கண்டித்து மீட்டு கொண்டுவர வேண்டும். பெற்றோர்களுக்கு தெரியாத விஷயங்கள் கூட நண்பர்களுக்கு தெரிய வரும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தவறான வழியில் சென்றால் முதலில் சக மாணவர்களுக்கே தெரியும் என்பதால் நண்பர்களே அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

'ஜீசஸ் கூடதான் குடிச்சிருக்காரு'... மது குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பகீர் பதில்!

‘ஆமா! குடும்ப ஆட்சிதான்! தொண்டர்கள் உற்சாகம்... அதிர வைக்கும் திமுக!

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை... பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு... ஓபிஎஸ் திடீர் முடிவு!

கல்யாண வீட்டில் குத்தாட்டம் போட்ட ‘பிரேமலு’ நடிகை... வைரல் வீடியோ!

17 வயது சிறுமி பலாத்கார புகார் பின்னணியில் அரசியல் சதியா? மவுனம் கலைத்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in