குழந்தைகளின் கோடைக் கொண்டாட்டம்... ’போனி பியர்ஸ்’ படம் ரிலீஸ்!

'போனி பியர்ஸ்’
'போனி பியர்ஸ்’

குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டமாக ‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளியாகி இருக்கிறது.

தேர்வு, ஸ்பெஷல் கிளாஸ் போன்ற பரபரப்புகள் இல்லாமல் இந்த கோடை விடுமுறையில் பல குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை விரும்புவார்கள். அதிலும் திரையரங்களில் அனிமேஷன் படம் பார்ப்பதென்றால் அவர்களுக்கு குதூகலம்தான். அப்படி குழந்தைகளை குஷிப்படுத்த நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’ அனிமேஷன் திரைப்படம்.

 ‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’
‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’

இது, அறிவியல் புனைக்கதையின் அடிப்படையில் உருவாகியுள்ள சீன அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம். ‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’ தொடரில் வெளியாகும் ஒன்பதாவது படம் இது. இப்படத்தை இயக்குநர்கள் லின் யோங்சாங்க், ஷாவோ ஹெகி இணைந்து இயக்கியுள்ளனர். இளம் வயது ப்ரையரும் ப்ராம்பளும், கிரிஸ்டல் பீக்ஸ் காட்டில் ஏற்படும் காட்டுத்தீயில் தங்கள் தாயை இழக்கின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரையும் ரோபோட் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக். அங்கே, எதிர்பாராத விதமாகத் தங்கள் தாயைப் பற்றிய செய்தி ஒன்றினைக் கேள்விப்படுகின்றனர்.

எப்படியாவது தங்கள் தாயைக் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தீர்மானித்து, சார்லோட்டைச் சந்திக்கிறார்கள். அவளுடைய ஆம்பர் கல் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஸ்க்ராப் ரெபல் கும்பலால் சார்லோட் கடத்தப்பட்டபோது, சகோதரர்களான ப்ரையரும் ப்ராம்பளும் விக்குடன் இணைந்து, அவளை மீட்பதற்காக ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்தப் பயணம் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்தக் கதை.

 ‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’
‘போனி பியர்ஸ்: கார்டியன் கோட்’

கதையாக இது குழந்தைகளை குஷிப்படுத்தினாலும் திரைக்கதையில் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கான படம் எனும்போது, வசனங்களை இன்னும் எளிமையாக்கி செழுமைப் படுத்தியிருக்கலாம்.

அனிமேஷன் கண்களை உறுத்தாத வகையில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. குறிப்பாக, குட்டி பியர்ஸ் குழந்தைகளின் ஃபேவரிட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! பல குறைகள் இருந்தாலும் இந்தக் கோடையில் குழந்தைகளின் திரைக் கொண்டாட்டத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in