இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்த 
விளையாட்டு

இந்தியாவுக்கு 274 ரன்கள் இலக்கு... சதமடித்து அசத்திய டேரில் மிட்செல்!

காமதேனு

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தின் டேரில் மிட்செல் சதமடித்து அசத்தினார்.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்று வரும் 21வது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 17 ரன்களிலும் அவுட் ஆகினர். ஆனால் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கூட்டணி அமைத்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

டேரில் மிட்செல் சதமடித்து அசத்தல்

சிறப்பாக ஆடிய ரவீந்திரா, 75 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் லதாம் உட்பட பிற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய மிட்செல், இறுதி ஓவர் வரை களத்தில் நின்று 127 பந்துகளில், 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

5 விக்கெட் வீழ்த்தி அசத்திய முகமது ஷமி

இந்த போட்டியில் கடைசி நேரத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி, 10 ஓவர்கள் வீசி, 54 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதன் மூலம் இந்த தொடரில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார் முகமது ஷமி. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 273 ரன்களை எடுத்தது. 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்க உள்ளது.

SCROLL FOR NEXT