பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 
அரசியல்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பை கெடுத்தது திமுக தான்... ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

காமதேனு

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த 3 முறை கிடைத்த வாய்ப்பை திமுக கெடுத்து விட்டது என பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் பாமக சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ” சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 3 முறை கிடைத்த வாய்ப்பை திமுக கெடுத்து விட்டது.

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுகவுக்கு மனம் இல்லை. சமூக நீதியே எங்கள் மூச்சு என்று பேசும் திமுக, இது குறித்து மூச்சே விடவில்லை என கடுமையாக விமர்சித்தார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காக்கா கல்லேல்கர் ஆணையத்தின் அறிக்கையை, 1953-ல் அன்றைய பிரதமர் நேரு குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பதாகவும், தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எப்படி எழுப்புவது என கடுமையாக விமர்சித்தார்.

SCROLL FOR NEXT