தமிழக ஆளுநர் 
அரசியல்

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மேலும் ஒரு வழக்கு!

காமதேனு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் தேவையின்றி தலையிடுவதாக ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 198 பக்க மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாக கூறி ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக ஆளுநருக்கு எதிராக ஏற்கெனவே ஒரு மனுவை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள நிலையில், தற்போது சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை ஆளுநர் செய்வதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT