முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
அரசியல்

உதகையில் 6 பேர் மண் சரிவில் பலியான சம்பவம்... நிவாரணம் அறிவித்த முதல்வர்!

காமதேனு

நீலகிரி மாவட்டம் உதகையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த லவ்டேல் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் பிரிஜூ என்பவருக்கு சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இன்று அதன் அருகில் இருந்த மண் சரிந்து பத்துக்கும் மேற்பட்ட கட்டுமான பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புப் படையினர் உடனடியாக அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உதகையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கதறும் உறவினர்கள்

ஆனால் செல்லும் வழியிலேயே ராதா (38), பாக்கியம் (36), முத்துலட்சுமி (36), உமா (35), சங்கீதா (30) மற்றும் சகிலா (30) ஆகிய 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஜெயந்தி (56), சாந்தி (45), தாமஸ் (24), மகேஷ் (23) ஆகிய 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கான நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீலகிரி மண் சரிவியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் காயம் அடைந்து உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

SCROLL FOR NEXT