செய்திகள்

திருப்பதியில் 5 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசை… இலவச தரிசன டிக்கெட் ரத்து!

காமதேனு

திருப்பதியில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகளை முற்றிலும் ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் திருப்பதியில் குவிந்தனர். அதுமட்டும் இல்லாமல் நாளை வரை தொடர் விடுமுறையும் உள்ளது. எனவே, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருப்பதிக்கு படையெடுத்துள்ளனர்.

இலவச தரிசனம் செய்ய 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்பதால் அவர்கள் தரிசனம் செய்ய 48 மணி நேரம் ஆகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. எனவே இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதன்படி அக்டோபர் 1, 7, 8 ,14, 15 ஆகிய தேதிகளில் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டிக்கெட்டுகளை முற்றிலும் ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நேரடியாக திருமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் வரிசையில் நிற்க வைத்து அதன் பிறகு இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி வரக்கூடிய பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று 87,081 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 300  ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

SCROLL FOR NEXT