ஹேமந்த் சோரன் 
தேசம்

ஹேமந்த் சோரனுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு... தொண்டர்கள் ஏமாற்றம்!

காமதேனு

நில மோசடி தொடர்பான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 5 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி நில மோசடி தொடர்பான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அம்மாநில முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, அவர் ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பலத்த பாதுகாப்புடன் ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு அமலாக்கத்துறையினர் இன்று ஹேமந்த் சோரனை அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட ஹேமந்த் சோரன்

அப்போது அங்கு கூடியிருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொண்டர்கள், 'ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத்', 'சிறைக் கதவுகள் உடைக்கப்படும், சகோதரர் ஹேமந்த் விடுவிக்கப்படுவார்' என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர். ஹேமந்த் சோரனும் தனது ஆதரவாளர்களை பார்த்து கையசைத்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹேமந்த் சோரனின், அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

SCROLL FOR NEXT