ஞானவாபி மசூதி 
தேசம்

ஞானவாபி மசூதி வழக்கு: இந்துக்களின் வழிபாட்டுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

காமதேனு

ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து பிரார்த்தனைகளை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாராணசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு

இதை எதிர்த்து, மசூதியின் விவகாரங்களை கவனிக்கும் 'அஞ்சுமான் இன்டெசாமியா மசூதி குழு’, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வாலின் ஒற்றை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஞானவாபி மசூதி குழு மூத்த வழக்கறிஞர் ஃபர்மான் நக்வி ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடுகையில், “மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்துக்கள் வழிபடும் உத்தரவை மாவட்ட நீதிபதி பிறப்பித்தாரா அல்லது தானாக முன்வந்து இந்த உத்தரவை பிறப்பித்தாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம்

தொடர்ந்து ஃபர்மான் நக்வி தங்கள் தரப்பின் பல்வேறு விளக்கத்தை நீதிபதியிடம் எடுத்துரைத்தார். இதையடுத்து நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இந்த வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் உள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபட வழங்கப்பட்ட அனுமதிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையும் விதிக்கவில்லை.

இதையும் வாசிக்கலாமே...

ரசிகர்கள் அதிர்ச்சி... விஜய் கட்சிக்கு TVK பெயர் கிடைக்காது!?

அதிகாரிகளை அலறவிடும் ஆட்சியர்... திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி சம்பளத்தை உதறிய விஜய்... பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு!

உதகையில் பயங்கர நிலச்சரிவு; மண்ணில் புதைந்து 7 பேர் பலியான சோகம்

தாயைக் கொன்ற மகன்... வழக்கில் திடீர் திருப்பம்... கணவனே மனைவியைக் கொன்றது அம்பலம்!

SCROLL FOR NEXT