மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள். 
சர்வதேசம்

காஸாவில் 24 மணி நேரத்தில் 274 குழந்தைகள் உயிரிழப்பு... உலக சுகாதார நிறுவனம் கவலை!

காமதேனு

24 மணி நேரத்தில் 274 குழந்தைகள் உள்பட 2215 பேர் தெற்கு காஸாவில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

காஸாவில் நடந்த தாக்குதல்

ஹமாஸ் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அதோடு, காசாவுக்கு வழங்கி வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றையும் நிறுத்தியுள்ளது. இதனால், காஸாவில் வசிக்கும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மின்சார விநியோகம் இல்லாததால் இரவு நேரம் வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது. அத்தியாவசிய மின்சார தேவைக்கான எரிபொருள் இல்லாததால் மின் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காஸாவுக்கு விநியோகித்து வந்த குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அசுத்தமான நீரை குடிப்பதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், "சுத்தமான குடிநீர் இல்லாதது மிகப் பெரிய உடனடி அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. அசுத்தமான நீரை குடிப்பதால் நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளது. சுத்தமான நீரை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத மக்கள் மத்தியில் இது ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

தெற்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 274 குழந்தைகள் உள்பட 2215 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்வதால் சிகிச்சை அளிக்க தாமதமாகிறது. கெடு விதித்து தாக்குதல் தொடுப்பது மக்களுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு சமம்" என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

SCROLL FOR NEXT