மன்னர் மூன்றாம் சார்லஸ்; பட்டத்து இளவரசர் வில்லியம் மற்றும் மனைவி கேத் மிடில்டன் 
சர்வதேசம்

புற்றுநோய் தாக்கத்திலிருந்து மீளும் மன்னர்; தீவிர சிகிச்சையில் மருமகள்... தவிப்பில் இங்கிலாந்து

எஸ்.எஸ்.லெனின்

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு வருகையில், அவரது மருமகள் புற்றுநோய்க்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார்.

2022, செப்டம்பரில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, நீண்ட காலமாக பட்டத்து இளவரசராக இருந்த அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக மகுடம் சூடினார். ஆனால் ஓராண்டு இடைவெளியில் அவர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. கேன்சர் தாக்கத்தை வெளியுலகுக்கு மன்னர் உறுதி செய்தபோதும், அது எம்மாதிரியான பாதிப்பு எந்த கட்டத்தில் உள்ளது என்பதை மன்னரோ, அரண்மனை நிர்வாகமோ வெளியுலகுக்கு தெரிவிக்கவில்லை.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்

இதனிடையே 75 வயதாகும் மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கான பிரம்மாண்ட இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளில் அரண்மனை நிர்வாகம் இறங்கி இருப்பதுமான தகவல்கள் வெளியாயின. ’மெனாய் பாலம்’ என்ற சங்கேதப் பெயரிலான மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாட்டுக்கான ஆவணங்கள் வெளியே கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதே போன்று ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள், ’ஆபரேசன் லண்டன் பாலம்’ என்ற மறைமுகப் பெயரில், அவர் உயிரோடு இருக்கும்போதே ஆவணங்களாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மன்னரை பீடித்திருக்கும் புற்றுநோய் தாக்கம் குறைந்திருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிபடுத்தும் வகையில், புற்றுநோய் உறுதியானது முதல் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்த்து வந்த மன்னர் மூன்றாம் சார்லஸ் ஜூன் 6 அன்று பிரான்சில் நடைபெறும் ’டி-டே 80ம் ஆண்டு விழாவில்’ பங்கேற்க உள்ளார். மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளுக்கு இங்கிலாந்து தயாராகும் வகையில் அவரின் புற்றுநோய் தாக்கம் தீவிரமடைந்து வந்த நிலையில், மன்னரின் பிரான்ஸ் பயணம் பக்கிம்ஹாம் அரண்மனைக்கு ஆசுவாசம் தந்துள்ளது.

பிரான்ஸ் விழாவில் மன்னர் சார்லஸ் உடன் ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் உடன் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் பயணத்துக்கு முன்னதாக ஜூன் 5 அன்று போர்ட்ஸ்மவுத்தில் நடைபெறும் விழாவில் இவர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால் வில்லியமின் மனைவியும், இங்கிலாந்தின் எதிர்கால ராணியுமான கேத் மிடில்டன் இந்த விழாக்களில் பங்கேற்கப்போவதில்லை. காரணம் மன்னர் சார்லஸ் புற்றுநோயுடன் போராடியபோதே, மருமகள் கேத் மிடில்டனின் புற்று நோயும் உறுதி செய்யப்பட்டது.

மன்னர் மூன்றாம் சார்லஸ்; மருமகள் கேத் மிடில்டன்

கேன்சருக்கு எதிரான போராட்டத்தில் கேத் மிடில்டன் வயிற்றில் அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றி அளிக்காததில், தீவிர கீமோதெரபி சிகிச்சையில் அவர் ஆழ்ந்துள்ளார். இதனால் குழந்தைகளுடனான தனது புகைப்படத்தைக்கூட போட்டோஷாப் செய்து வெளியிட்டதில் சர்ச்சைக்கு ஆளானார். 75 வயதாகும் மன்னர் சார்லஸ் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதன் மத்தியில் 42 வயதாகும் மருமகள் கேத் மிடில்டன் புற்றுநோய்க்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார். இங்கிலாந்து அரண்மனை மீதான சாப நிழலுக்கு விமோசனம் எப்போது என்பது இங்கிலாந்து மக்களின் ஆதங்கமாக நீடிக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார்... பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

குஸ்தி களமான நாடாளுமன்றம்... எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை; அதிர்ச்சி வீடியோ!

வரலாற்றில் இடம் பிடித்த கணினி ஆபரேட்டர்... 5 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது சிக்கினார்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவில் மாஸாக உருவாகும் ‘GOAT'... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT