இன்ஸ்பெக்டர் கீதா
இன்ஸ்பெக்டர் கீதா  
க்ரைம்

குடும்பத் தகராறில் புகாரளித்த பெண்; 95 சவரன் நகைகளை வாங்கி ஏப்பம் விட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்!

சந்திரசேகர்

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் 95 நகைகளை அடகு வைத்து மோசடி செய்த திருமங்கலம் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ராஜேஷ் - அபிநயா. இருவரும் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் இருவருக்குமான மோதல் அதிகரிக்கவே திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். இந்த புகாரை இன்ஸ்பெக்டர் கீதா விசாரித்து வந்துள்ளார். விசாரணையின் போது, கணவருடன் இனி சேர்ந்து வாழ தனக்கு விருப்பமில்லை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு அபிநயா கூறியுள்ளார்.

திருமண ஜோடி

இதையடுத்து ராஜேஷ் 95 சவரன் நகையை, இன்ஸ்பெக்டர் கீதாவிடம் அளித்துள்ளார். இதை அவர் அபிநயாவிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இது தெரியாமல், அபிநயா குடும்பத்தினர், ராஜேஷ் குடும்பத்தினரிடம் நகைகளை திருப்பி தரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது நகைகளை ஒரு மாதத்திற்கு முன்பே இன்ஸ்பெக்டரிடம் அளித்ததாக ராஜேஷ் கூறியுள்ளார். இதையடுத்து நகைகளை திருப்பித் தரும்படி இன்ஸ்பெக்டர் கீதாவிடம், ராஜேஷ் கேட்டபோது, "நகைகளை கொடுக்க முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்து கொள்ளுங்கள்" என்று எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீதாவிடம் டிஎஸ்பி நடத்திய விசாரணையில், தனியார் நிதி நிறுவனத்தில் நகையை ரூ.43 லட்சத்திற்கு அடகு வைத்தது தெரியவந்தது. நகைகளை மீட்டு திருப்பி கொடுக்க கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 20 சவரன் நகைகளை மட்டும் திருப்பிக் கொடுத்து மீதம் 75 சவரன் நகைகளை தராமல் காலம் கடத்தியதால், நேரடியாக கீதா மீது டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

திருமங்கலம் காவல் நிலையம்

இது குறித்து விசாரணை நடத்திய மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யபாரதி, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நகைகளை மீட்டுத்தர காவல் நிலையத்தை நாடிய பெண்ணின் நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டிய பெண் காவல் ஆய்வாளரே, தன்னிடம் ஒப்படைத்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது.. வரலாறு படைத்தார் இந்திய நடிகை!

நிறைமாத நிலவே வா... வா... நடிகை அமலபால் லேட்டஸ்ட் போட்டோஷூட்

ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!

சொகுசு ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் பில் பாக்கி... 18 சதவீத வட்டியுடன் செலுத்த எச்சரிக்கை!

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகனுடன் மது விருந்து நடத்திய குற்றவாளி!

SCROLL FOR NEXT