பாலியல் வழக்கில் கைதான திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம், பிரவீன். 
க்ரைம்

வழக்கை வாபஸ் வாங்கு... காவல் நிலையத்திற்குள் நுழைந்து பெண் போலீஸை மிரட்டிய திமுக நிர்வாகிகள்!

காமதேனு

பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்ற திமுக நிர்வாகிகளுக்கு எதிராக அளித்த புகாரை வாபஸ் பெற கூறி பெண் காவலரை காவல் நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொந்தரவு அளித்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 129வது வட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளான சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன்(23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம்(24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து திமுக தலைமை கழகம் நிர்வாகிகள் இரண்டு பேரையும் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது ‌.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓரு கும்பல் விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து கணினி அறையில் பணியில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் சென்று விருகம்பாக்கம் திமுக எம்எல்ஏ பிரபாகராஜா அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். மேலும் உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறிய அந்த கும்பல், பெண் காவலரை அழைத்து ஏகாம்பரம், பிரவீன் ,தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது, அவர்களுக்கு எதிராக நீ சாட்சி அளிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்தனர்.

அதுமட்டுமின்றி நீ அளித்த பாலியல் புகாரை வாபஸ் பெற வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மலர்வண்ணன் ஓடி வந்து அந்த கும்பலை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா, விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பெண் காவலரை சமாதானமாக போக சொல்லுங்கள், வீண் பிரச்சனை வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பெண் காவலரின் செல்போன் எண்ண வாங்கி அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் கேகே நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்ற வாட்டர் விஜய் தலைமையில் வந்த திமுகவினர் காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பெண் காவலரை மிரட்டல் விடுத்து தெரியவந்தது. மேலும் விஜயகுமார் திமுகவில் வடக்கு பகுதி துணைச்செயலாளராக பதவி வகித்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்ற திமுக நிர்வாகிகளுக்கு எதிராக அளித்த புகாரை வாபஸ் பெற கூறி பெண் காவலரை காவல் நிலையத்துக்குள் புகுந்து திமுகவினர் மிரட்டிய சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000... திட்டத்தை உடனே நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

பேச மறுத்த காதலி... வெறித்தனமாய் 13 முறை கத்தியால் குத்திய காதலன்!

தங்கம் விலை அதிரடியாக உயர்வு... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

இன்று வானில் வர்ணஜாலம்... நெருப்பு வளையத்திற்குள் நிகழப்போகும் அற்புதம்!

SCROLL FOR NEXT