மா.சுப்பிரமணியன் ஆய்வு 
க்ரைம்

குன்னூர் கோர விபத்து... கதறி அழுத குடும்பத்தினர்... கலங்கிய அமைச்சர்!

காமதேனு

குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதிகளை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகையை வழங்கி ஆறுதல் கூறினார்.

தென்காசி மாவட்டத்திலிருந்து ஊட்டிக்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று தென்காசிக்கு திரும்பும் வழியில் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாறு அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் 9 பேர் பலியாகினர்.

20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் விபத்து நடந்த இடத்தை தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதிக்கான காசோலையை பதிக்கப்பட்டவர்களிடம் வழங்கினார். அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களைப் பார்த்து கலங்கிய அமைச்சர், பின்னர் ஆறுதல் கூறி அனைவரையும் தேற்றினார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

SCROLL FOR NEXT