செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல்
செல்போன் கடைக்காரர் மீது தாக்குதல் 
க்ரைம்

'தொழுகை நேரத்தில் பஜன் பாடலா பாடுகிறாய்'?... இளைஞரை தாக்கிய கும்பலால் பரபரப்பு!

காமதேனு

தொழுகை நேரத்தின் போது பஜன் பாடல்களைப் பாடிய இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்று மாலை 6.30 மணியளவில் செல்போன் கடைக்கு ஒரு கும்பல் வந்துள்ளது. அப்போது அந்த கடையில் இருந்த முகேஷ், பஜன் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தொழுகை நேரத்தில் பஜன் பாடல்களைப் பாடலாமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் முகேஷை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கினர்.

இதனால் தாக்கப்பட்ட முகேஷ், உடனடியாக ஹலசுரு கேட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையறிந்த நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை செல்லமாட்டோம் என்று ரயில் நிலையம் முன்பு திரண்டனர். பொதுமக்களின் கோபம் அதிகமானதால் 5 பேரின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தாக்கப்படும் முகேஷ்

இதுகுறித்து முகேஷ் கூறுகையில், " கடந்த இரண்டு மாதங்களாக கடை வைத்துள்ளேன். தொடர்ந்து சிலர் என்னிடம் பணம் பறிக்க முயன்றனர். ஆனால், நான் பணம் தர மறுத்தேன். அதனால் 6 பேர் கொண்ட கும்பல் பழிவாங்கும் நோக்குடன் நேற்று மாலை கடைக்கு வந்து என்னைத் தாக்கினர். ஸ்பீக்கரால் தலையில் அடித்து இழுத்துச் சென்றனர்" என்றார்.

இந்த நிலையில் சுலேமான், ஷான்வாஸ், ரோஹித், டேனிஷ், தருண் ஆகியோர் மீது ஹலசூர் கேட் காவல் நிலையத்தில் ஐபிசி 506, 504, 149, 307, 323 மற்றும் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர் இன்று இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

SCROLL FOR NEXT