நடிகை தமன்னா கூட ஆட விடலன்னு ஹீரோ ரஜினி கேட்குற மாதிரி தானே வில்லன் நடிகர் த்ரிஷா கூட அப்படியொரு சீன் வைக்கலன்னு கேட்டாரு, இது தப்புன்னா? அப்போ அதுவும் தப்பு இல்லையா என நடிகை பாத்திமா பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலி கான் சமீபத்தில் பேசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'லியோ' படத்தில் இணைந்து அவர் நடித்த போது. " நடிகை த்ரிஷாவுடன் பலாத்கார காட்சி எல்லாம் இருக்கும் என நினைத்தேன். பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை எல்லாம் கட்டிலில் தூக்கிப் போட்டு நடித்தது போல சான்ஸ் கிடைக்கும் என்று பார்த்தால், அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிட்டுப் போனது போல அலேக்காக அவரை காஷ்மீருக்குக் கொண்டு போய்ட்டு கொண்டு வந்து விட்டார் லோகேஷ் கனகராஜ்" என்று மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.
இதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்ததுடன் இனிமேல் மன்சூர் அலிகானுடன் சேர்ந்து நடிக்கமாட்டேன் என்றார். தேசிய மகளிர் ஆணையம் சார்பில் மன்சூர் அலி கான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனிப்பட்ட த்ரிஷா குறித்து அவதூறாக பேசவில்லை என்றும் நடிகை த்ரிஷா பற்றி சினிமா ரீதியாகவே பேசினேன் என்றும் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார்.
நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து சினிமா பிரபலங்கள் பலர் மன்சூர் அலி கானுக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு ஆதரவு தெரிவிப்பது போல நடிகை பாத்திமா பாபு கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர், "வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் பலாத்கார காட்சி குறித்து கேட்டது தப்பு என்றால், ஹீரோ ரஜினிகாந்த் தமன்னாவுடன் கடைசி வரை ஆட விடவே இல்லை என 'ஜெயிலர்' ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதும் தப்பு தானே?" என பாத்திமா பாபு கேள்வி எழுப்பியுள்ளார். "அதற்கு ஏன் யாருமே பொங்கல" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காமெடியாக பேசுவதும், பொதுவெளியில் பலாத்கார காட்சி தொடர்பாக அநாகரிகமாக பேசுவதற்கும் வித்தியாசம் இல்லையா என நடிகை பாத்திமா பாபுவிற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சீனாவை பதறவைக்கும் நிமோனியா காய்ச்சல்; இந்தியாவில் பரவுமா? - மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
பிக் பாஸ் நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி - பிஸ்மி மீண்டும் அதிரடி புகார்!
மிஸ் பண்ணாதீங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்!
மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா... ட்வீட் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!