சூர்யா- அமீர் 
சினிமா

சூர்யாவுக்கு நான் தான் வில்லன்... அமீர் கொடுத்த ’வாடிவாசல்’ அப்டேட்!

காமதேனு

‘வாடிவாசல்’ படத்தில் நடிகர் சூர்யாவுக்கு தான் வில்லனாக நடிக்க இருப்பதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா- இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’. இதற்கான டெஸ்ட் ஷூட் கூட சென்னையில் நடந்தது. அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், அதன் பிறகு அந்தப் படம் பற்றி மூச்சு பேச்சில்லாமல் இருந்தது. இதனால், படம் கைவிடப்பட்டதா எனவும் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஹீரோ நடிக்கிறாரா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

‘வாடிவாசல்’

ஆனால், படம் நிச்சயம் நடக்கும் என வெற்றிமாறன் சொல்லியிருந்தார். படத்தில் இயக்குநர் அமீரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ‘பருத்திவீரன்’ படம் தொடர்பாக அமீர் தரப்புக்கும் நடிகர் கார்த்தி தரப்பிற்கும் பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதனால், அவர் சூர்யாவுடன் இணைந்து நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இதனை தெளிவுப்படுத்தியுள்ள அமீர் படத்தில் தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். “’வாடிவாசல் படம் நிச்சயம் தொடங்கும். இதில் ஹீரோவுடன் படம் முழுக்க பயணிக்கும் வில்லன் கதாபாத்திரம்தான் எனக்கு. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று அந்தப் பேட்டியில் சொல்லி இருக்கிறார் அமீர்.

சூர்யா- அமீர்

முன்பு அமீர் இயக்கத்தில் ‘மெளனம் பேசியதே’ படத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்தப் படம் நடிகராக சூர்யாவுக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தது. 2002-ல் இந்தப் படம் வெளியாகி இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அமீர்- சூர்யா இணை நடிகர்களாக ‘வாடிவாசல்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

அடுத்த அதிர்ச்சி...  சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!

உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!

மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!

SCROLL FOR NEXT