ஆகையால் குண்டர் சட்டத்தில் கைது செய்தோம்... திருவண்ணாமலை போலீஸ் திடீர் விளக்கம்!

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், 7 பேர் மீது எதற்காக குண்டர் தடுப்புக் காவலில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்து திருவண்ணாமலை காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க 3,200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 125 நாட்களாக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி போராடும் விவசாயிகள் 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதில் அருள் ஆறுமுகம், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்யராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதனால் அவர்கள் 7 பேரும் ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது போடப்பட்ட குண்டாஸை திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளை தீவிரவாதிகளைப் போல நள்ளிரவில் கைது செய்துள்ளதாக அறப்போர் இயக்கத்தின் வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

மண்ணுக்கு துரோகம் செய்பவர்களையும், அதற்கு துணை போவோரையும் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், குண்டர் சட்ட நடவடிக்கையை கைவிட்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அமமுக தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை பாஜக தீவிரமாக கையில் எடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து நாளை திடீர் போராட்டத்தை பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.  இந்த நிலையில், இது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏழு பேரும் ஏற்கெனவே சேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்ட பணிகளுக்கு எதிராகவும் போராடியவர்கள். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அவர்கள்,  அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம் கடந்த 8 மாதங்களாக செய்யாறில் தங்கி இருந்து மக்களை போராட்டத்துக்குத் தூண்டிவிட்டார். இவர்கள் எல்லாம் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே... அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in