86 மருத்துவ காலியிடங்கள்... கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு... தமிழக அரசு அதிரடி

86 காலி மருத்துவ இடங்கள்
86 காலி மருத்துவ இடங்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. இதை வீணாகாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ் படிப்புகள்
எம்பிபிஎஸ் படிப்புகள்

இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.

இதன்படி மத்திய அரசு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நவம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கலந்தாய்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு
கலந்தாய்வு தேதியை அறிவித்த தமிழ்நாடு அரசு

கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!

கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!

பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து... 'டெரர்' வாலிபரிடம் விசாரணை

சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!

அதிர்ச்சி... மனைவி தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்... போலீஸில் சரண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in