கோவாக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை... பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!

கோவாக்சின்
கோவாக்சின்

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவியபோது, கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த நிலையில், 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது.

கோவாக்சின் இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலான பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தங்களுக்கும் தடுப்பூசியால் எதாவது ஆபத்து ஏற்படுமா என பொதுமக்கள் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில்தான் பாரத் பயோடெக் நிறுவனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘கோவாக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படது. கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். 27,000 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட முடிவில் கோவாக்சின் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?

நடிகை ஸ்ரீதேவியுடன் புகைபிடிக்கும் ராம்கோபால் வர்மா... மார்ஃபிங் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெட்ரோல் பங்க் ஊழியரை முகம் சுளிக்க வைத்த பெண்... வைரலாகும் வீடியோ!

காதல் விவகாரத்தில் விபரீதம்... 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

கோவிஷீல்ட் தடுப்பூசியால் மகள் மரணம்; சீரம் இன்ஸ்டிடியூட் மீது பெற்றோர் வழக்குப்பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in