சுதேசி முடிவு எடுத்த டாடா நிறுவனம்... ஆப்பிள் போன்கள் அசெம்பிள் செய்ய புதிய இயந்திரங்களை உருவாக்கியது!

டாடா - ஆப்பிள்
டாடா - ஆப்பிள்

ஆப்பிள் நிறுவன செல்போன்களை அசெம்பிள் செய்வதற்காக துல்லியமான செயல் திறன் கொண்ட இயந்திரங்களை வடிவமைத்துள்ள டாடா நிறுவனம், அதன் செயல்முறைகளை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன செல்போன்களை அசெம்பிள் செய்யும் பணிகளில் டாடா நிறுவனம் முன்னணி வகிக்கிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்தது. சீனாவில் கொரோனா காலத்தின் போது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்தியாவில் தங்கள் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பிற நிறுவனங்களுடன், ஆப்பிள் நிறுவனம் கூடுதலான பணிகளை ஒப்படைக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

தானியங்கி செல்போன் அசெம்ப்ளிங் இயந்திரம்
தானியங்கி செல்போன் அசெம்ப்ளிங் இயந்திரம்

அத்தகைய நிறுவனங்கள் வரிசையில் டாடா முன்னோடியாக இருந்து வருவதால், அந்நிறுவனம் கூடுதல் பணி வாய்ப்புகளை பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துல்லியமான அசெம்பிளிங் இயந்திரங்களை சமீபத்தில் டாடா நிறுவனம் உருவாக்கி உள்ளது. பூனே மற்றும் பெங்களூருவில் இந்த புதிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. துல்லியமான முறையில் ஆப்பிள் மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை இந்த இயந்திரங்கள் அசம்பிளிங் செய்யும்.

டாடா - ஆப்பிள்
டாடா - ஆப்பிள்

இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் டாடா நிறுவன கிளையில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை டாடா நிறுவனம் செய்துள்ளது. அசம்பிளிங் இயந்திரங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்ப்பதற்காகவும், சீனாவின் உற்பத்தி திறனையும் தாண்டி இந்தியாவில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை டாடா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in